Thursday, September 17, 2009

சொல்வனம் 21.08.2009 இதழில்

நண்பர்களே,
சொல்வனம் 21.08.2009 இதழின் உள்ளடக்கம்:
அமர்நாத் கோவிந்தராஜன் | கட்டுரை
கார்கில் போர் நடந்துமுடிந்து சென்ற ஜூலையோடு பத்து வருடங்கள் ஆகின்றன. இன்னொரு கார்கில் போர் ஏற்பட்டால் நம்மால் சமாளிக்க முடியுமா? கார்கில் போரில் நாமிழைத்தத் தவறிகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோமா? இந்திய ராணுவத்திடம் நவீனத் தாக்குதல்களுக்கான தளவாடங்கள் உள்ளனவா? - அலசுகிறார் அமர்நாத் கோவிந்தராஜன்.
எஸ்.வி.ராமகிருஷ்ணன் | கட்டுரை
"பாகிஸ்தான் பிறந்தவேளை மரண யோகம் என்றும் சொன்னார்கள். அடுத்த அறுபத்தியிரண்டு ஆண்டுகால வரலாற்றைத் இன்று திரும்பிப் பார்ததால் அது சரியாக இருக்கலாம் என்று தோன்றவும் செய்யலாம்."
ஆர்.ராஜகோபாலன் | கவிதை
ஸ்வர்ணமால்யா கணேஷ் | கட்டுரை
கோலாட்டம் என்பது பல நூற்றாண்டுகளாக நம் கலாசாரத்துடன் தொடர்புடையது என்பதை கோயில் சிற்பங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே விளக்குகிறார் ஸ்வர்ணமால்யா கணேஷ்.
வ.ஸ்ரீநிவாஸன் | சிறுகதை
"வெளியிலிருந்து ஒரு குரல் ஒரு ஜாதிப் பெயரைச் சொல்லி கூடவே நாயிங்களா வெளியே வாங்கடா என்று இரண்டு மூன்று ஆபாச சொற்றோடர்களைக் கத்தியது. "
சேதுபதி அருணாசலம் | புகைப்படம்
உலகின் சிறந்த புகைப்படங்களை அறிமுகப்படுத்தும் புதிய தொடர் இது: உலகெங்கும் அறியப்படும் இந்தப் பிரபலமான முகம் இப்போது ஆப்கானிஸ்தானின் ஏதோ ஒரு மூலையில் பர்தாவுக்குப் பின் மறைந்திருக்கிறது.
ரா.கிரிதரன் | இசைத்தெரிவு
அறிவியலிலும் சரி, கலை வடிவங்களிலும் சரி திறந்த மனநிலையே பல புதிய சாத்தியங்களுக்கு இட்டுச் செல்லும். இந்தத் தொகுப்பைக் கேட்கும் அனைவரையும், சங்கம இசை வடிவம் மற்றும் ஒலிகள், அடுத்த கட்ட ரசிகனாக மாற்றும் என்பதில் சந்தேகமேயில்லை.
கர்ட் வானகட் - தமிழில்: விஸ்வநாத் சங்கர் | மொழிபெயர்ப்புச் சிறுகதை
உலக மக்கள் அனைவரும் எல்லா விதங்களிலும் ஒரே அச்சில் வார்த்தவர்களாக இருக்க வேண்டுமென்ற கருத்தின் அபத்தத்தைத் தனக்கேயுரிய குரூர நகைச்சுவை கலந்து இக்கதையில் சொல்லியிருக்கிறார் வானகட்.
யூமா வாசுகி | மொழிபெயர்ப்புச் சிறுகதை
"கடவுள் என்னைக் காப்பாற்றினார் சகோதரர்களே! கடவுள் எப்போதும் பாவப்பட்டவர்களுடன்தான் இருப்பார். நதிக்கடியில் நிறைய புனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் என் கஷ்டங்களைப் பார்த்து மனம் வருந்தி, எனக்கு அன்பளிப்பாக இந்த மாடுகளைக் கொடுத்தார்கள்!'
ராமன் ராஜா | அறிவியல்
"ஆன்லைன் வாசகர்கள் ட்விட்டர் பற்றி அறியாமல் இருக்க முடியாது. ‘என்னுடைய பூனை பிங்க்கி காலையிலிருந்து பர்ர்..ர் என்று சப்தம் எழுப்புகிறது' என்பது போன்ற மானாவாரியான செய்திகளுக்கிடையே சில சமயம் முத்து ரத்தினங்களும் சிக்குவதுண்டு. "
மனித இயல்பு - புதிய பார்வை, ஈரானில் பெண்ணியம், நாஜிக்களின் எழுச்சி? மதமும், அபினும்.
இவற்றுடன்,
கார்ட்டூன் - ராரா, ஓவியங்கள் - ஜெயராஜ், வாசகர் கடிதங்கள்.
அன்புடன்,